Sunday, November 8, 2009

நட்புதிர் காலம்!

இலையுதிர் காலம் போல்
எனக்கு வாய்த்ததோர்
நட்புதிர் காலம்!
உதிர்ந்தவற்றை விட மனமின்றி
ஓடி ஓடி ஒட்ட வைத்தேன்!
உள்ளிருந்து பூத்த நிலை மாறி
இடையில் பசைத் தேவைப்படினும்..
ஒட்டித்தான் இருந்தன!
ஒவ்வொரு காற்றிலும்
படபடக்கிறது இதயம்!
உதிர்க்கவும் மனமின்றி
மீண்டும் வேர் விடவும் வழியின்றி
இருந்தும் இல்லாத
நட்பு வெளியில்
வசந்தத்தைத் தொலைத்துவிட்டு
கழியுது காலம்!

3 comments:

  1. மீதம் இருக்கும் சிலவற்றையாவது உதிராமல் காத்துக்கொள்வோம். . .

    ReplyDelete
  2. புயலுக்கும் அசையாத
    பூக்களை கொண்டு புது
    உலகம் படைப்போம் !!!

    ReplyDelete