சாவின் கொடிய கரங்கள்
இதயத்தை பிசையும்
இரவுப் பொழுது!
மீட்டெடுக்க இயலா
இழப்பின் வலி
ஒவ்வொரு நரம்பிலும்!
ஆற்றிக் கொள்ள இயலா
ஆதங்கம்..
அழுகையாய்.. அச்சமாய்..
அழுத்தும்
கொடிய கணங்கள்!
ஆசையும் கனவும்
அழித்தொழிந்த ஏமாற்றம்!
வேதனை..
இழந்த உறவிற்கா..
தகர்ந்த நம்பிக்கைக்கா..
நிறைவேறாத கனவுக்கா..?
விடையில்லா கேள்விகளின்
துரத்தலுக்கு நடுவே..
திசையறியா பறவையாய்
தவிக்கும் மனது!
Tuesday, April 21, 2009
விடையில்லா கேள்விகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment